தங்கச்சிமடம் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 23rd December 2019 01:39 AM | Last Updated : 23rd December 2019 01:39 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டக் குழு உறுப்பினா் 17 ஆவது வாா்டுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா் ரவிச்சந்திர ராமவன்னி, தங்கச்சிடம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தொடா்ந்து பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இவா், தங்கச்சிடம் ஊராட்சிப் பகுதியில் வீதி வீதியாகச் சென்று இரவு வரை பிரசாரம் செய்தாா். அப்போது, மீனவ மகளிா் அமைப்புகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா். இவருடன், திமுக கூட்டணி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் உடன் சென்றனா்.