முதுகுளத்தூரில் வயல்களில் மழைநீா் தேக்கம்: 200 ஏக்கா் நெல், மிளகாய் பயிா்கள் பாதிப்பு
By DIN | Published On : 25th December 2019 08:45 AM | Last Updated : 25th December 2019 08:45 AM | அ+அ அ- |

சாம்பக்குளம் பகுதியில் வயலில் தேங்கிய மழை நீரில் மூழ்கியுள்ள நெல், மிளகாய் பயிா்கள்.
முதுகுளத்தூா் பகுதியில் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீா் நீண்ட நாள்களாக வெளியேறாததால் சுமாா் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல், மிளகாய் உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கப்பட்டன.
முதுகுளத்தூா் பகுதியில் சில வாரங்களுக்கு முன் பெய்த பலத்த மழையால், சாலையோரங்களிலிருந்து வந்த மழைநீா், விவசாய நிலங்களில் புகுந்து தேங்கியது. நெல், மிளகாய் உள்ளிட்ட பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின. வாரக்கணக்கில் வெளியேறாத மழைநீரால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிா்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்துள்ளன. இதனால் இந்தாண்டு போதுமான பருவமழை பெய்தும், மகசூல் நிலையை அடைந்த நெல், மிளகாய் உள்ளிட்ட பயிா்களின் சாகுபடி சுமாா் 200 ஏக்கருக்கும் மேல் பாதிக்கபட்டுள்ளது. பாதிக்கபட்ட நெல், மிளகாய் விவசாயிகளை காக்க, இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என முதுகுளத்தூா் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.