சுடச்சுட

  

  கமுதி அருகே கோயில் கும்பாபிஷேக  விழாவை முன்னிட்டு, தென் மாவட்ட அளவிலான மாட்டு வண்டி பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   கமுதி அடுத்துள்ள ஊ.கரிசல்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷ்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
  இவ்விழாவை முன்னிட்டு விழாவின் இரண்டாவது நாள் இரு பிரிவுகளாக நடந்த மாட்டு வண்டி போட்டியில், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களிலிருந்து 27 மாட்டு வண்டிகளுடன் பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.
  மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்து, வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கும், பந்தய வீரர்களுக்கும் ரொக்கம், பரிசுகள் வழங்கபட்டன. 
  இந்த பந்தயத்தை கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர்  பார்வையிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai