சுடச்சுட

  

  ராமநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கதிர் அறுப்பு வாகனத்தில் மோதியதில் தலை துண்டாகி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சேதுக்கரையைச் சேர்ந்த கண்ணதாசன் மகன் விக்னேஷ் (22). ரகுநாதபுரம் பகுதியில் பலசரக்குக் கடையில் பணிபுரிந்து வந்தார். அவர் உணவு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஒத்தக்கடை பகுதிக்குச் சென்றார். அப்போது இருட்டில் ராமநாதபுரம் நோக்கிச் சென்ற கதிர் அறுக்கும் இயந்திர வாகனத்தில் மோதியுள்ளார். 
  இதில், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
  அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருப்புல்லாணி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai