சுடச்சுட

  

  சாலை விபத்து, குற்றங்களை தெரிவிக்க செல்லிடப்பேசி எண் அறிவிப்பு

  By DIN  |   Published on : 13th February 2019 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்து மற்றும் குற்றங்களை தெரிவிக்க பொதுத் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் சரக துணைத் தலைவர் என்.காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
  ராமநாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் போக்குவரத்து குற்றங்கள், சாலை விபத்துகள் தொடர்பான புகார்களை 9498181457 என்ற எண்ணில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த எண் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் செல்லும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலையத்துக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கப்படும். இதனால் காவல் துறையினர் மூலம் விபத்துகள் தொடர்பான பிரச்னைகள் நிவர்த்தி செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai