சுடச்சுட

  

  முதுகுளத்தூரில்  திங்கள்கிழமை  நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் ஆப்பனூர் அணியினர் முதல் பரிசு பெற்றனர்.
   தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு முதுகுளத்தூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதனை தமமுக தலைவர் ஜான்பாண்டியன் தொடக்கி வைத்தார். போட்டிக்கு தமமுக மாவட்ட செயலாளர் எம்.சேகர், கட்சி நிர்வாகி ராம்கி, கிராமத் தலைவர் ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  போட்டியில் மதுரை, ராமநாதபுரம், பரமக்குடி உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் ஆப்பனூர் ஏ.பி.ஆர்.அறியவள் அணி முதல் பரிசும், முதுகுளத்தூர் ஜே.பி.ஆர் "ஏ' மற்றும் "பி' அணிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசும், வீரம்பல் ஏஞ்சல் அணியினர் நான்காம் பரிசும் பெற்றனர்.
  போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தமமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai