சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் அதிவேக இணைய சேவை விழிப்புணர்வு பேரணி

    By DIN  |   Published on : 13th February 2019 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக இணைய சேவையின் விழிப்புணர்வுப் பேரணி  திங்கள்கிழமை நடைபெற்றது.
     ராமநாதபுரம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மதுரை பிஎஸ்என்எல் மேலாளர் ராஜம் தொடக்கிவைத்தார். பிஎஸ்என்எல் ஊழியர்கள், தனியார் அமைப்புகள் கலந்து கொண்ட இப்பேரணியில் அதிவேக இணைய சேவை வசதியை விளக்கும் வகையில் பதாகைகளும் எடுத்துவரப்பட்டன. 
     பேரணியானது சந்தைத் தெரு, அக்ரஹாரம், ராஜவீதி, வண்டிக்காரத் தெரு வழியாக கேணிக்கரை வழிவிடு முருகன் கோயிலை அடைந்தது. பேரணியில் பிஎஸ்என்எல் ராமநாதபுரம் மேலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai