சுடச்சுட

  

  ராமநாதபுரம் அரசு குடியிருப்புப் பகுதியில் உள்ள மங்கள விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
   மகாகணபதி ஹோமத்துடன் அனைத்து வகை சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டன. மங்கள விநாயகர் சந்தனக்காப்பில் அருள்பாலித்தார். அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 
  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
  பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் குருக்கள் கோபாலகிருஷ்ணய்யர், ரவி, ராஜாராமய்யர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai