திருவிடைமருதூரில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே திருவிடைமருதூர் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாடானை அருகே திருவிடைமருதூர் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை தாலுகா கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி திருவிடைமிதியூர், தொத்தார்கோட்டை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே போல் காலனி குடியிருப்பு  பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதிக்கென்று கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு குழாய் இணைப்பின்றி தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்டதில் இருந்து தண்ணீர் இதில் வரவே இல்லை. 
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியது: குடிநீர் தொட்டியை திறப்பதற்காக வந்த அதிகாரிகள் 5, 6 குடங்கள் தண்ணீர் ஊற்றி குழாயை திறந்து வைப்பது போல் புகைப்படம் எடுத்துச் சென்றனர். ஆனால் இதுநாள் வரை தண்ணீர் வரவே இல்லை.
 இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் தண்ணீருக்காக பல கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய அவலம் உள்ளது என்றனர். 
எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com