ராமநாதபுரத்தில் புதிய அரசுப் பேருந்துகள் தொடக்கம்

ராமநாதபுரத்தில் 9 புதிய அரசுப் பேருந்துகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன்

ராமநாதபுரத்தில் 9 புதிய அரசுப் பேருந்துகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.
இப்பேருந்துகள் ராமநாதபுரம் - மதுரை, ஏர்வாடி தர்ஹா - குமுளி, சாயல்குடி-சிதம்பரம், ராமேசுவரம்-திருச்சி, ராமேசுவரம்-மதுரை, ராமேசுவரம்-
கரூர்,  ராமேசுவரம்-மதுரை, 
முதுகுளத்தூர்-சிதம்பரம், கமுதி-சேலம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 4 கட்டங்களாக மொத்தம் 67 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் கோமதி செல்வக்குமார், துணை மேலாளர் ஆர்.சிவலிங்கம், கோட்ட மேலாளர் வி.சரவணன், ராமநாதபுரம் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர்கள் பத்மகுமார், பி.தமிழ்மாறன் மற்றும் அரசு அலுவலர்கள், அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com