ஜெயலலிதா 71-ஆவது பிறந்தநாள் விழா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் அதிமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.காளிமுத்து தலைமையில், ஜெயலலிதா உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள், பயணிகளுக்கு பொங்கல், இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மின்வாரிய செயலாளர் ராஜேந்திரன், கமுதி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் பூமிநாதன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கருமலையான், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் சேகரன், கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அமமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.கே.ஜி.முத்துராமலிங்கம் தலைமையில், கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
பரமக்குடியில்: பரமக்குடியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ், மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகாமுனியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கே.சி.ஆணிமுத்து, சோமாத்தூர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் எம்.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் எஸ்.வி.கணேசன் வரவேற்றார்.
 விழாவில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து பரமக்குடி நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டுகளைச் சேர்ந்த நலிவுற்ற குடும்பத்தினருக்கு இலவச தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, சில்வர் பாத்திரங்கள், குடங்கள், வேஷ்டி, சேலைகள் என ரூ. 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
மானாமதுரையில்:  மானாமதுரையில் உள்ள 18 வார்டுகளிலும் அந்தந்த பகுதி அதிமுகவினர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். இதேபோல் ஒன்றிய பகுதிகளிலும் அதிமுகவினர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.குணசேகரன், கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னை மாரியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
தேவகோட்டையில்: தேவகோட்டை பேருந்து நிலையத்தில் அதிமுக இளைஞரணி சார்பில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பழம், பிஸ்கட் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உள்ள 75 குழந்தைகளுக்கு ஆடைகள், உணவுகள் வழங்கப்பட்டது.
 மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் கே.சுந்தரலிங்கம் தலைமையில் புவனேஸ்வரி அம்மன் கோயில் முன்பு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், வழக்குரைஞர் ஆசைத்தம்பி, கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அமமுக சார்பில் பேருந்து நிலையம் அருகில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் இரவுசேரி முருகன் தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், கட்சியின் நகரச் செயலாளர் வழக்குரைஞர் எஸ்.கமலக்கண்ணன், இரவுசேரி குமார், டி.எஸ்.கே. செல்வம், கா.சண்முகநாதன் பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com