முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
By DIN | Published On : 28th February 2019 07:56 AM | Last Updated : 28th February 2019 07:56 AM | அ+அ அ- |

நேரு யுவகேந்திரா சார்பில் திருப்புல்லாணி ஒன்றிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு திங்கள்கிழமை மாலை பரிசளிக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட நேருயுவகேந்திரா மற்றும் திருப்புல்லாணி ஒன்றியம் ஆலங்குளம் குறிஞ்சி மகளிர் மன்றம், காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நடைபெற்றன.
கால்பந்து, கைப்பந்து, கபடி, ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு, ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளும், பெண்களுக்கான போட்டிகள் தனியாகவும் நடத்தப்பட்டன.போட்டியில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு திங்கள்கிழமை மாலையில் சின்னமாயாகுளத்தில் நடைபெற்றது.
பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட நேருயுவகேந்திரா அமைப்பின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர் நோமான் அக்ரம் தலைமை வகித்தார்.
சுழற் சங்கத் தலைவர் சுந்தரம், பொதுமக்கள் - காவல் துறை நல்லுறவு சங்கத்தைச் சேர்ந்த சீனிசேகு மற்றும் பெருமாள், சின்னமாயாகுளம் தலைவர் தர்மலிங்கம், துணைத் தலைவர் சந்திரன், உடற்பயிற்சி ஆசிரியர் கெளதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.