முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
செஞ்சிலுவை சங்க மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வசதி
By DIN | Published On : 04th January 2019 01:32 AM | Last Updated : 04th January 2019 01:32 AM | அ+அ அ- |

இந்திய செஞ்சிலுவைச் சங்க ராமநாதபுரம் கிளையின் பெருங்குளம் பகல் நேர மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை மாவட்ட சரக காவல் துணைத் தலைவர் என்.காமினி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர் மரக்கன்றுகளையும் அவர் நட்டு வைத்தார். விழாவுக்கு ஹாரூன் தலைமை வகித்தார். புரவலர் பத்திர எழுத்தர் ராமநாதன், பெருங்குளம் முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆம்புலன்ஸ் வாகனத்தை நன்கொடையாக வழங்கிய கே.எஸ்.எம். சகாபுதீன், கீழக்கரை செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளர் எஸ். சுந்தரம், ஜி. ஜானகிராமன், மருத்துவர் எம்.சுந்தரராஜன், இளையோர் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளர் பேராசிரியர் வள்ளி விநாயகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவர் ஹாஜி அஸ்மாபாக் அன்வர்தீன் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை பொருளாளர் சி. குணசேகரன் இணைச் செயலர் தி.ஜீவா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.