பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் விஸ்வநாததாஸ் நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 04th January 2019 01:27 AM | Last Updated : 04th January 2019 01:27 AM | அ+அ அ- |

பரமக்குடி காந்தி சிலை அருகே சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரரும், நாடகத் தந்தை என்று அழைக்கப்படும் தியாகி விஸ்வநாததாஸின் 78-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் பொதுச் செயலர் எஸ்.ஐ.ஏ.ஹாரிஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர்.சண்முகசுந்தரம் , ஏ.தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சங்கர் கலந்துகொண்டு, தியாகி விஸ்வநாததாஸின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திமுக நகர் பொருளாளர் என்.அக்பர்அலி, ஓய்வுபெற்ற வேளாண்மை உதவி இயக்குநர் மா.மு.மணவாளன், மாவட்ட காங்கிரஸ் செயலர் வி.முகம்மது அப்பாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட கலைப்பிரிவு தலைவர் முனியசாமி வரவேற்றார்.