சுடச்சுட

  

  அம்மா' இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

  By DIN  |   Published on : 13th January 2019 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தமிழ்நாடு அரசின் அம்மா' இரு சக்கர வாகனம் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளார். 
  இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
  ராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக 2017-18 ஆம் ஆண்டிற்கு அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தின் கீழ் 1,920 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அதே போல தற்போது 2018-19ம் ஆண்டிற்கும் அதே எண்ணிக்கையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.
  தகுதிகள்: இரு சக்கர வாகனம் பெறுவதற்கு கிராமப்புறத்தில் வசிப்பவராகவும், குறைந்தது 8 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவராகவும் இருத்தல் அவசியம். 
  மேலும் நகர்ப்புறங்களில் பணிபுரிபவராகவும், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளவராகவும் இருத்தல் வேண்டும். பயனாளிகளின், தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். ஆகவே, குடும்பத்திற்கு பொருள் ஈட்டுவதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து பணிபுரியும் மகளிர் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், அங்கீகரிக்கப்பட்ட ,அங்கீகரிக்கப்படாத தொழிற்பிரிவுகளில் பணியாளர்களாக தங்களை பதிவு செய்துள்ள மகளிரும், கடைகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரும், சுய தொழில் , சிறுவணிகத்தில் ஈடுபட்டுள்ளோரும் விண்ணப்பிக்கலாம்.
  விண்ணப்பிக்கும் பயனாளிகளில் தொலைதூரத்திலுள்ள குக்கிராமங்கள், குடும்பத்தலைவராக உள்ள பெண்கள், ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனுடயவர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாதவர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து வயது, முகவரி, ஓட்டுநர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளுடன் நகராட்சி, ஊராட்சி, மாவட்ட நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai