சுடச்சுட

  

  திருவாடானையில் ஊருணிக் கரையில் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு 

  By DIN  |   Published on : 13th January 2019 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருவாடானை சந்தைப்பேட்டை ஊருணிக்கரையில் வீடுகள் கட்டி ஆக்கிரமித்துள்ளதை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  திருவாடானையில் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊருணி சுமார் 4 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊருணி, சந்தைக்கு வரும் ஆடு, மாடுகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கியது. 
  இப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்களும் இந்த ஊருணித் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் ஊருணியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டதால், ஊருணி தண்ணீரை குடிக்க பயன்படுத்தாமல் மற்ற தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர். 
  இந்நிலையில் ஊருணியின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் குடியிருப்போர் ஊருணிக் கரைப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி விரிவாக்கம் செய்து விட்டனர். மேலும் ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அடைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியது:
  அதிகாரிகளின் ஆதரவோடு இந்த ஊருணிக் கரையில் பலர் பட்டா வாங்கி விட்டனர். மேலும் ஆக்கிரமித்து குளியலறையும் கழிப்பறையும் கட்டிவிட்டனர். பல முறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. உயர்நீதிமன்றம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு வழக்குகளில் வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஊருணி ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்துவருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி ஊருணியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai