சுடச்சுட

  


  முதுகுளத்தூர் அருகே 100 நாள் வேலை திட்டம் சரிவர நடக்க வில்லை எனக்கூறி மதுபோதையில் பெண்ணிடம் தகராறு செய்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பேரையூர் செங்கோட்டைபட்டியில் 100 நாள் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. வேலை திட்ட பொறுப்பாளர் காளிமுத்துவின் மனைவி புஷ்பராணி (43) தலைமையில் கிராம மக்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
  அப்போது அதே ஊரைச் சேர்ந்த பொன்னையா மகன் ராஜேந்திரன் (65) மது போதையில்அங்கு வந்து நூறு நாள் வேலையை சரியாக வழங்காமல் ஆள் பார்த்து வழங்குவதாக கூறி புஷ்பராணியை தகாத வார்த்தையால் திட்டி தாக்க முயன்றாராம். இது குறித்து புஷ்பராணி பேரையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai