சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு பூச்சி மேலாண்மை செயல்விளக்கப் பயிற்சி

    By DIN  |   Published on : 13th January 2019 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    தேவகோட்டை வட்டாரம் வேளாண்மை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம் கண்டதேவி கிராமத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, காய்கறி பயிர்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
    இதற்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் அ.ரேகா தலைமை வகித்தார். பயிற்சியில் மதுரை வேளாண்மைக் கல்லூரி இணைப் பேராசிரியர் பெவுலா காய்கறி பயிர்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார். 
    இப் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் சூர்யா மற்றும் தோட்டக்கலை துணை அலுலர் காசிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai