விவசாயிகளுக்கு பூச்சி மேலாண்மை செயல்விளக்கப் பயிற்சி

தேவகோட்டை வட்டாரம் வேளாண்மை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம்


தேவகோட்டை வட்டாரம் வேளாண்மை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம் கண்டதேவி கிராமத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, காய்கறி பயிர்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
இதற்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் அ.ரேகா தலைமை வகித்தார். பயிற்சியில் மதுரை வேளாண்மைக் கல்லூரி இணைப் பேராசிரியர் பெவுலா காய்கறி பயிர்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார். 
இப் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் சூர்யா மற்றும் தோட்டக்கலை துணை அலுலர் காசிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com