பரமக்குடியில் அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறு: 2 பேர் கைது

பரமக்குடியில் அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறு செய்த 4 பேர் மீது வழக்குப் பதிந்து 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

பரமக்குடியில் அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறு செய்த 4 பேர் மீது வழக்குப் பதிந்து 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 எமனேசுவரம் மலையான்குடி பகுதியைச் சேர்ந்த உதயன் மகன் பாலசுப்பிரமணியன் (50). அரசுப் பேருந்து நடத்துநர். சம்பவநாளன்று இவர் பரமக்குடியிலிருந்து, நயினார்கோவில் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பணியாற்றினார். அந்த பேருந்தில் எமனேசுவரம் எஸ்.எஸ்.கோவில் தெருவைச் சேர்ந்த ராசு மகன் புஷ்பராஜ் (36), பவுல்ராஜ் மகன்கள் சங்கர் (34),  சதீஸ்குமார், நாகு மகன் சிங்கத்துரை ஆகியோர் பயணம் செய்துள்ளனர். 
எமனேசுவரம் ஈஸ்வரன்கோவில் பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பேருந்தில் வந்த 4 பேரும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தகாத வார்த்தைகளை பேசிக் கொண்டு வந்துள்ளனர்.
 இதனை அப்பேருந்தின் நடத்துநர் பாலசுப்பிரமணியன் கண்டித்தரர். இதில் கோபமடைந்த அவர்கள் நடத்துநரை பணிசெய்ய விடாமல் தடுத்ததுடன், 4 பேரும் சேர்ந்து தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து எமனேசுவரம் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து புஷ்பராஜ், சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்து ராமநாதபுரம் சிறைக்கு கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com