முதுகுளத்தூரில் திருவள்ளுவர் தினம்: பரிசளிப்பு

முதுகுளத்தூரில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பில் அரசு பொதுத் தேர்வில்

முதுகுளத்தூரில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பில் அரசு பொதுத் தேர்வில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல்காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில்  தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் கூ.லெட்சுமணன், துணைத் தலைவர் என்.பாலகிருஷ்ணன், ஆசிரியர் துரைப்பாண்டியன், இணைச் செயலர் உ.பால்ச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தமிழ் பாடத்தில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 30 மாணவ,மாணவிகளுக்கு எம்எல்ஏ மலேசியா எஸ்.பாண்டியன் பாராட்டு சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கினார். 
நிகழ்ச்சியினை தொடர்ந்து திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறளுக்கு பெருமை சேர்ப்பது ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் காதர்மைதீன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com