ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் இன்று காணும் பொங்கல் கலை நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் வியாழக்கிழமை  காணும் பொங்கலையொட்டி காலை முதல் மாலை வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் வியாழக்கிழமை  காணும் பொங்கலையொட்டி காலை முதல் மாலை வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பொங்கலின் மூன்றாவது நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள அரியமான் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் கூடுவர். மக்கள் கூடுவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தெம்மாங்குப் பாட்டு என பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை மக்கள் கண்டுகளிக்கலாம் எனக்குறிப்பிட்டுள்ளார். 
அரியமான் கடற்கரையில் காணும் பொங்கலுக்காக மக்கள் அதிகளவில் கூடுவதை முன்னிட்டு அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்  தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com