ஆசிரியர் கூட்டணி ஜன. 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வரும் 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலை


தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வரும் 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அண்ணாநகரில் உள்ள சிஐடியூ அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆசிரியர் கூட்டணியின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் எம்.முனியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சே.முத்துமுருகன் தீர்மானங்களை விளக்கிப்பேசினார். 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: அங்கன்வாடி பணியிடங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்துவது கண்டிக்கத்தக்கது. பள்ளிகளை இணைத்தல் என்ற பெயரில் கிராமப்புற பள்ளிகளையும், 3500 சத்துணவு மையங்களையும் மூடும் முடிவை அரசு கைவிடவேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி முதல் (செவ்வாய்க்கிழமை) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்பது, ஏற்கெனவே நடந்த அரசாணை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் முத்துராமன், முருகானந்தம், பிரிட்டோ, சந்திரசேகர், ராமு, ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com