கமுதி அருகே சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி

கமுதி அருகே சாலையோரத்தில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் அவதிப்பட்டு வருவதாக


கமுதி அருகே சாலையோரத்தில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கமுதி அடுத்துள்ள பேரையூரிலிருந்து இலந்தைகுளம், கள்ளிக்குளம் செல்லும் விலக்குச் சாலையில் பேரையூர் ஊராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் அருகே மக்கும், மக்கா குப்பைகள் சேகரிக்கும் இடமிருந்தும், அப்பகுதி வீணடிக்கபட்டுள்ளது. இதனால் கள்ளிக்குளம் செல்லும் சாலையை ஒட்டியுள்ள குண்டாறு வரத்துக் கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு, குப்பை கிடங்காக உருமாற்றபட்டுள்ளது. மேலும் இங்கு எரிக்கப்படும் இறைச்சிக் கழிவுகள், குப்பைகளால் துர்நாற்றம் வீசி, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வரத்துக் கால்வாயில் கழிவுநீர் தேங்குவதால், சிறுமழை பெய்தாலே கழிவுநீரோடு சேர்ந்து மழைநீர் அருகில் உள்ள கண்மாயில் தேங்குகிறது. இதனால் கண்மாய் நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேரையூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை பிரித்தெடுக்ககும் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com