கமுதி ஊராட்சி ஒன்றியத்தில்பயன்பாடின்றி கிடக்கும் குப்பை தொட்டிகளால் அரசு நிதி ரூ.47.70 லட்சம் வீண்

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சிகளில் பராமரிப்பின்றி உள்ள குப்பைத் தொட்டிகளால், தெருக்களில் குப்பைகள் தேங்கி,


கமுதி ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சிகளில் பராமரிப்பின்றி உள்ள குப்பைத் தொட்டிகளால், தெருக்களில் குப்பைகள் தேங்கி, துர்நாற்றம் வீசுவதோடு அரசுப்பணம் ரூ.47.70 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கமுதி அருகே எழுவனுôரில் 2016-17, மற்றும் 2018 இல், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் கமுதி ஒன்றியத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 5 குப்பை தொட்டிகள் வீதம் 53 ஊராட்சிகளுக்கும் ரூ.47.70 லட்சம் செலவில் 265 குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள கிராமங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு கிராமங்களில் பொதுமக்களிள் பயன்பாட்டுக்காக தெருக்களில் வைத்து குப்பைகளை சேகரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
தெருக்கள், பஜார்களில் குப்பைகள் தேங்காமல் இருக்க குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான ஊராட்சிகளில் வழங்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்காமல், ஊராட்சி அலுவலக வளாகத்தில் பயன்பாடின்றி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து கிராமங்களிலும் தெருக்களில் குப்பைகள் குவித்து துர்நாற்றம் வீசுகிறது. அதே வேளையில் புதிய குப்பை தொட்டிகள் துருப்பிடித்து பயன்பாடின்றி சேதமடைந்துள்ளன. இதனால் கமுதி ஒன்றியத்தில் ரூ. 47.70 லட்சம் அரசு பணம் வீணடிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. 
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கமுதி ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளிலும் பயன்பாடின்றி வீணடிக்கப்பட்டு வரும் குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர, நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com