Enable Javscript for better performance
இடப் பிரச்னையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 6 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    இடப் பிரச்னையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 6 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 01st July 2019 02:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை அருகே வழிமுத்தூர் கிராமத்தில் இடப்பிரச்னை சம்பந்தமாக பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    வழிமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் மனைவி சொர்ணாம்பிகா (55). இவர் சனிக்கிழமை மாலையில் தனது நிலத்தை சுத்தம் செய்யச் சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சிலர் வழிமறித்து அவரைத் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொர்ணாம்பிகா புகார் அளித்தார். அதன்பேரில், வழிமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், இவரது மனைவி நித்யா மற்றும் உறவினர்களான குமார், ராதிகா, ராஜூ, வசந்தா ஆகிய 6 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai