சுடச்சுட

  

  உப்பூர் அனல் மின் நிலையப் பணிகளால் கடல் தொழில் பாதிப்பு: ஆட்சியரிடம் மீனவர்கள் புகார்

  By DIN  |   Published on : 02nd July 2019 06:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர் அனல் மின் நிலையப் பணிகளால் மோர்ப்பண்ணை பகுதியில் கடல் தொழில் பாதிக்கப்படுவதாக பட்டங்கட்டியர் கிராம நிர்வாகக் குழுவினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
    துரை.பாலன் தலைமையில் அவர்கள் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது
  அவர்கள் கூறியதாவது: எங்கள் ஊர், கடல் முகத்துவாரப் பகுதியில் உப்பூர் அனல் மின் நிலையத்துக்கான கழிவுகளைக் கடலில் கொட்டும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுவருகிறது. இந்த பாலத்தால், நாட்டுப் படகுகள் கரை ஒதுங்கும் போது, ஊருக்குள் நாங்கள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், அனல் மின் நிலையத்தின் கழிவுகள் கடலில் கொட்டப்படுவதால் மீன் வளம் அழியும் நிலையும் ஏற்படும். ஆகவே, மீனவர்கள் தொழில் முற்றிலும் பாதிக்கப்படும். ஆகவே, அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமத்தினரிடம் விளக்கவேண்டும். கடல் வளம் அழியாத வகையில் கட்டுமானப் பணிகளை நடத்தவேண்டும் என்றனர். 
    செல்லிடப்பேசி கோபுரத்தால் பாதிப்பு: காட்டுப்பரமக்குடி பகுதியில் முல்லை நகரில் புதியாக செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி குடியிருப்போர் நலச்சசங்கத்தினர் ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.
   அவர்கள் கூறுகையில், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து கதிர்வீச்சு காரணமாக குழந்தைகள், முதியோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் புதிதாக மீண்டும் ஒரு செல்லிடப்பேசி கோபுரத்தை அமைக்கக் கூடாது என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றனர். 
   குப்பை சேகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு: ராமநாதபுரம் சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்த வனசங்கரிஅம்மன் கோயில் இளைஞர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அது குறித்து அவர்கள் கூறுகையில், வனசங்கரி அம்மன் கோயில் பகுதியில் நகராட்சி இடத்தில் பூங்கா அமைக்கப்போவதாக கூறிய அதிகாரிகள், தற்போது குப்பை சேகரிப்பு மையம் அமைக்கும் பணியைத் தொடங்கியிருப்பது சரியல்ல. ஆகவே குப்பை சேகரிப்பு மையம் அமைக்கக் கூடாது என்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்தில் கேட்டபோது, சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்த மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் வகையில் நவீன மையம் அமைக்கப்படுகிறது. இதனால், சுகாதாரச்சீர்கேடு ஏற்படாது என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai