தொழிற்பயிற்சி மையங்களுக்கான கலந்தாய்வில் 329 பேர் பங்கேற்பு
By DIN | Published On : 08th July 2019 02:06 AM | Last Updated : 08th July 2019 02:06 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் 329 பேர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 அரசு தொழிற்பயிற்சி மையங்களும், 4 தனியார் தொழிற்பயிற்சி மையங்களும் உள்ளன. அவற்றுக்கான 2019-20 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன. இந்நிலையில் முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம் பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வயர்மென் படிப்புக்கு அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 80 இடங்களுக்கும், தனியார் மையங்களில் 10 இடங்களுக்கும் என மொத்தம் 90 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. அதில் அரசு இடங்களுக்கான கலந்தாய்வில் 69 பேர் பங்கேற்று சேர்க்கை நடந்தது. தனியார் மையங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், அரசு பயிற்சி மையங்களுக்கு 21 பேரும், தனியார் மையங்களுக்கு 10 பேரும் தேர்வு செய்யவேண்டியுள்ளது.
2 ஆவது நாளாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பிட்டர், வெல்டர், கார்பெண்டர் உள்ளிட்ட பிரிவுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை காலை நடந்தது. அதற்கு 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 160 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் விரும்பியது தவிர வேறு பிரிவுகள் ஒதுக்கப்பட்டு சேர்க்கை முழுமையாக நடைபெறும் என தொழிற்பயிற்சி மைய அதிகாரிகள் கூறினர்.
கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை மாவட்டதிறன் மேம்பாட்டு பிரிவு உதவி இயக்குநரும், அரசு தொழிற்பயிற்சி மைய முதல்வருமான (பொறுப்பு) ரமேஷ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.