சுடச்சுட

    

    தோப்படைபட்டியில் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க 3 மணி நேரம் காத்திருக்கும் அவலம்

    By DIN  |   Published on : 10th July 2019 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி அருகே 2 ஆண்டுகளாக காவிரி குடிநீர் விநியோகம் இல்லாததால், சாலையோர தரைதள தொட்டியிலிருந்து ஒரு குடம் தண்ணீரை சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சேகரித்து வருகின்றனர்.
    கமுதி - சாயல்குடி செல்லும் வழியில் உள்ள தோப்படைபட்டியில் 820-க்கும் அதிகமான குடும்பத்தினர் உள்ளனர். இங்குள்ள கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருப்பது காவிரி குடிநீர் மட்டுமே. இங்கு 2 ஆண்டுகளாக காவிரி குடிநீர் விநியோகம் இல்லாததால்,  தண்ணீர் லாரிகளை எதிர்நோக்கி  காலி குடங்களுடன் காத்திருக்கும் அவலம் உள்ளது. தற்போது குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், தண்ணீர் லாரிகள் தோப்படைபட்டி கிராமத்தில் நிற்பதில்லை. இதனால் தோப்படைபட்டி கிராம மக்கள் 2 கிமீ., தூரம் பயணித்து, சாலையோரத்தில் உள்ள தரைதள தொட்டியில் 3 மணி நேரம் காத்திருந்து, சிறு டப்பாக்களில் தண்ணீரை சேகரித்து, வடிகட்டி,  1 குடம் தண்ணீருக்காக, குடும்பம் குடும்பமாக, தள்ளுவண்டிகளுடன் காத்திருந்து தண்ணீரை சேகரித்து வருகின்றனர். 
    சாலையோரத்தில் செல்லும் குழாயில் குடிநீர் விநியோகம் உள்ள போதிலும், கிராமத்திற்கு மட்டும் 2 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் இல்லாதது, கிராம மக்களை கவலையடைய செய்துள்ளது.
     எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தோப்படைபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களிலும் காவிரி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai