சுடச்சுட

  

  பரமக்குடி வட்டம் நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
   கோயிலில் யாக சாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், யாக வேள்வியும்  நடைபெற்றன. தொடர்ந்து திங்கள்கிழமை அதிகாலையில் சிறப்பு பூஜைகளுக்குப் பின்  கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவில் நயினார்கோவில், அக்கிரமேசி, அஞ்சாமடை உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.   
   விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai