சுடச்சுட

  

  100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு தடையின்றி சம்பளம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 10th July 2019 02:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தடையின்றி வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  ஆர்ப்பாட்டத்துக்கு கமுதி கிளை செயலாளர் முத்திருளாண்டி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் மாரிமுத்து, தலைவர் ராமர், பொருளாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கத்  டேங்கர்கள், காவிரி குடிநீர் திட்ட குழாய்கள் மூலமாக குடிநீர் விநியோகம்  செய்ய வேண்டும். டேங்கர்கள் மூலமாக  சூரிய ஒளி மின் தயாரிப்பு நிலையத்திற்கு குடிநீர் எடுத்து செல்வதை தடுக்க வேண்டும்.  100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ரூ.224 கூலியை வழங்கி, தொடர்ந்து வேலை வழங்கவேண்டும். நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் தடையின்றி கிடைக்க, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் முருகன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தாலுகா துணை செயலாளர் முனியசாமி, துணை தலைவர் வேலுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
      

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai