தோப்படைபட்டியில் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க 3 மணி நேரம் காத்திருக்கும் அவலம்

கமுதி அருகே 2 ஆண்டுகளாக காவிரி குடிநீர் விநியோகம் இல்லாததால், சாலையோர தரைதள தொட்டியிலிருந்து

கமுதி அருகே 2 ஆண்டுகளாக காவிரி குடிநீர் விநியோகம் இல்லாததால், சாலையோர தரைதள தொட்டியிலிருந்து ஒரு குடம் தண்ணீரை சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சேகரித்து வருகின்றனர்.
கமுதி - சாயல்குடி செல்லும் வழியில் உள்ள தோப்படைபட்டியில் 820-க்கும் அதிகமான குடும்பத்தினர் உள்ளனர். இங்குள்ள கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருப்பது காவிரி குடிநீர் மட்டுமே. இங்கு 2 ஆண்டுகளாக காவிரி குடிநீர் விநியோகம் இல்லாததால்,  தண்ணீர் லாரிகளை எதிர்நோக்கி  காலி குடங்களுடன் காத்திருக்கும் அவலம் உள்ளது. தற்போது குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், தண்ணீர் லாரிகள் தோப்படைபட்டி கிராமத்தில் நிற்பதில்லை. இதனால் தோப்படைபட்டி கிராம மக்கள் 2 கிமீ., தூரம் பயணித்து, சாலையோரத்தில் உள்ள தரைதள தொட்டியில் 3 மணி நேரம் காத்திருந்து, சிறு டப்பாக்களில் தண்ணீரை சேகரித்து, வடிகட்டி,  1 குடம் தண்ணீருக்காக, குடும்பம் குடும்பமாக, தள்ளுவண்டிகளுடன் காத்திருந்து தண்ணீரை சேகரித்து வருகின்றனர். 
சாலையோரத்தில் செல்லும் குழாயில் குடிநீர் விநியோகம் உள்ள போதிலும், கிராமத்திற்கு மட்டும் 2 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் இல்லாதது, கிராம மக்களை கவலையடைய செய்துள்ளது.
 எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தோப்படைபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களிலும் காவிரி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com