ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திடீர் நிறுத்தம்

ராமநாதபுரம் நகருக்கான காவிரிக் கூட்டுக்குடிநீர் திடீரென செவ்வாய்க்கிழமை மாலை நிறுத்தப்பட்டதால்

ராமநாதபுரம் நகருக்கான காவிரிக் கூட்டுக்குடிநீர் திடீரென செவ்வாய்க்கிழமை மாலை நிறுத்தப்பட்டதால் நகரில் புதன்கிழமை மிகக்குறைந்த அளவே தண்ணீர் விநியோகம் நடைபெற்றது. 
        ராமநாதபுரம் நகருக்கு காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தினமும் சுமார் 30 லட்சம் லிட்டருக்கும் மேலாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென செவ்வாய்க்கிழமை மாலையில் திருச்சிப் பகுதியிலிருந்து வரும் காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 10 லட்சம் லிட்டர் குறைத்து விநியோகிக்கப்பட்டது. இதனால், ராமநாதபுரம் நகருக்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் தண்ணீர் வரத்து மிக மிகக் குறைந்தது. 
  இதனால் நிமிடத்துக்கு 27 ஆயிரம் லிட்டர் எனும் அழுத்தத்திலிருந்து 15 ஆயிரம் லிட்டர் என தண்ணீர் வேகம் குறைந்தது. 
 தண்ணீர் வரத்து குறைவால் புதன்கிழமை காலையில் நகரில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதித்தது.
 இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் முத்துக்கிருஷ்ணன் கூறியது: திருச்சி பகுதியில் குழாய் பராமரிப்புப் பணி காரணமாக தண்ணீரின் அளவு குறைந்தது. புதன்கிழமை பகல் முதல் தண்ணீர் விநியோகம் சீரானது என்றார்.
 மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் 25 இடங்களுக்கும் மேலாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதை உடனுக்குடன் சீரமைத்ததால் குடிநீர் அழுத்தம் குறைவது சீராகி அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் விநியோகம் சரியாக கிடைப்பதாக அதிகாரிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com