சுடச்சுட

  


  ராமநாதபுரத்தில் உள்ள கோதண்டராமர் சுவாமி கோயில் ஆனித் திருவிழாத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  இக்கோயிலின் ஆனித் திருவிழா கடந்த 4ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி தோளுக்கினியான், சிம்மம், ஆஞ்சநேய, கருட மற்றும் சேஷ வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
   விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் கடந்த 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. வியாழக்கிழமை காலையில் சுவாமி பிராட்டியருடன் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். மாலையில் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.
   விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் சுவாமி பிராட்டியருடன் எழுந்தருளிய நிலையில், தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். இதை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர். தேர் நிலையை அடைந்ததும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமையுடன் விழா நிறைவடைகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai