பரமக்குடியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் கொலை ஒருவருக்கு ஆயுள் தண்டனை; 4 பேர் விடுதலை

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 1ஆவது வார்டு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகன் மகன் முத்து(73). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், தனது மகள் சரவணப் பிரியாவை அதே ஊரைச் சேர்ந்த காரி மகன் கேசவனுக்கு திருமணம்


பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 1ஆவது வார்டு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகன் மகன் முத்து(73). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், தனது மகள் சரவணப் பிரியாவை அதே ஊரைச் சேர்ந்த காரி மகன் கேசவனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். கேசவனும் சண்முகப்பிரியாவும் தனியே வசித்து வந்தனர். 
இந் நிலையில் கேசவன் குடும்பத்திற்கும், அவரது அண்ணன் சரவணக்குமார் குடும்பத்திற்கும் காலியிடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதத்தால் கடந்த 2016 -ம் ஆண்டு செப்டம்பர் 28 இல் சண்முகசேகர் குடும்பத்தினர் கேசவன் மற்றும் சண்முகப்பிரியாவை கம்பு மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.  இதை முத்து தடுக்க முயன்றுள்ளார். இதில் அரிவாளால் வெட்டப்பட்டு முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 இக்கொலை தொடர்பாக எமனேசுவரம் போலீஸார் காரி(69), அவரது மனைவி மண்டியம்மாள், அவரது மகன் சண்முகசேகர்(46), சண்முகசேகரின் மனைவி தனலெட்சுமி(42), இவர்களது மகள்கள் அகிலா(22), அபர்ணா(19) ஆகிய 6 பேரை கைது செய்தனர். 
 இவ் வழக்கு பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி மலர்மன்னன் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், சண்முகசேகருக்கு ஆயுள் தண்டனையும், இவரது தந்தை காரிக்கு ரூ.3,500 அபராதம் விதித்தும், அபராதம் கட்டத் தவறினால் 6 மாத சிறைத் தண்டனையும் விதித்தார். 
                மேலும், இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த மண்டியம்மாள், தனலெட்சுமி, அகிலா, அபர்ணா ஆகிய 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com