ராமநாதபுரம் விவசாயிகளுக்கு கூட்டு பண்ணை பயிற்சி

ராமநாதபுரத்தில் கூட்டுப்பண்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. 


ராமநாதபுரத்தில் கூட்டுப்பண்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. 

ராமநாதபுரம் வட்டாரம் உழவர் மையத்தில் நடந்த பயிற்சிக்கு மாவட்ட  வேளாண்மை இணை இயக்குநர் எல்.சொர்ணமாணிக்கம் தலைமை வகித்தார். பரமக்குடியில் உள்ள உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் எஸ்.கண்ணையா, கூட்டுப்பண்ணை திட்டம் குறித்து விளக்கினார்.    மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை வேளாண்மை உதவி இயக்குநர் பாஸ்கர மணியன் கூட்டுப்பண்ணை திட்டத்தின் மூலம் குழுக்கள் உருவாக்கி பயனடைவதை விளக்கிக் கூறினார்.  
 மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஆர்.பாலாஜி, வேளாண்மை உதவி இயக்குநர் (பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்) பி.செல்வம் ,  வேளாண் வணிகத்துறை வேளாண்மை அலுவலர்கள் பாலமுருகன் மற்றும் உலகுசுந்தரம், வட்டார வேளாண்மை அலுவலர் என்.டி.கலைவாணி, தென்னை உழவர் உற்பத்தியாளர் குழுத்தலைவர் சே.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எம்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். ராமநாதபுரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ப.கோசலாதேவி நன்றி கூறினார்.
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள என்.பெத்தனேந்தல் கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பில் கூட்டுப் பண்ணை பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இம்முகாமிற்கு உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை துணை இயக்குநர் ச.கண்ணையா தலைமை வகித்தார். வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராகவன், பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  கூட்டுப்பண்ணையம் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு உழவர்ஆர்வலர் குழு அமைக்கப்படுவது குறித்தும், 100 உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு ரூ.5 லட்சம் மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து சிறு தானியங்களை மானாவாரி நிலங்களில் பயிர் செய்வது குறித்து அதிகாரிகள் விவரித்தனர்.   முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜெயப்பிரதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com