சர்வாதிகாரத்தை நோக்கி பாஜகஅடியெடுத்து வைக்கிறது: ப.சிதம்பரம்

சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பாஜக அரசு அடியெடுத்து வைக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.


சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பாஜக அரசு அடியெடுத்து வைக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கலைக்க முயற்சிக்கும் பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்துப் பேசியது:
கர்நாடகாவில்  ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் பா.ஜ.க.வை கண்டித்தும், மனித உரிமைகளை காக்கவும், ஜனநாயகத்தை காக்கவும்  இப்போராட்டம் நடைபெறுகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிப் பெற்ற சுதந்திரத்தை உள்நாட்டில் உள்ள சர்வாதிகாரிகளிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது: 
ஜனநாயகத்திற்கு பேராபத்து வந்துள்ளது. மாநிலங்களில் பாஜக அல்லாத ஆட்சியை கலைக்க கர்நாடகாவில் தொடங்கி பல மாநிலங்களில் முயற்சி நடைபெற்று வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே வேட்பாளர் என உலகில் பல நாடுகள் சர்வாதிகாரத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறது. அதை பாஜக பின்பற்றி வருகிறது. கட்சி தாவல் தடைச் சட்டம் உள்ளது. ஆனால் அந்த சட்டம் பாயாமல் அடைக்கலமாக உள்ளது. 
கட்சி தாவாமல் பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் சேருங்கள். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். நீங்களே வேட்பாளராக நில்லுங்கள். நாங்கள் பணத்தை செலவு செய்து உங்களை வெற்றிபெறச் செய்கிறோம் என்றும், அமைச்சர் பதவி தருகிறோம் என ஆசை வார்த்தைகளை கூறி பாஜக குதிரை பேரங்களை நடத்தி வருகிறது. நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் பாஜகவை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றார். 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் முன்னிலை வகித்தார்.  சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியா பாண்டியன் ஆகியோர்  கண்டன உரையாற்றினர். 
இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செல்லத்துரை அப்துல்லா, செந்தாமரை கண்ணன், ஜோதிபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பரமக்குடி நகர் தலைவர் அப்துல்அஜிஸ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com