ராமநாதபுரம் மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,634 வழக்குகளுக்கு தீர்வு

ராமநாத புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஒரே நாளில் 1,634 வழக்குகளுக்குத் தீர்வு காணப் பட்டுள்ளது. இதில் தீர்வுத்


ராமநாத புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஒரே நாளில் 1,634 வழக்குகளுக்குத் தீர்வு காணப் பட்டுள்ளது. இதில் தீர்வுத் தொகையாக ரூ.3.12 கோடி சம்பந்தப்பட்டோருக்கு வழங் கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட 14 இடங்களில் மக்கள் நீதிமன்றங்கள் சனிக்கிழமை காலை நடத்தப்பட்டன. ராம நாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளா கத்தில் மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான ஆர்.சண்முகசுந்தரம் தொடக்கி வைத்தார்.  மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான எம்.பிரீத்தா முன்னிலை வகித்தார். இதில் மக்கள் நீதிமன்ற நிரந்தர தலைவரும், மாவட்ட நீதிபதியுமான பி.ஆர்.ராம கிருஷ்ணன், சிறப்பு நீதிமன்ற (பி.சி.ஆர். நீதிமன்றம்)  நீதிபதி வி.வி.தனியரசு, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி டி.பகவ தியம்மாள்,  கூடுதல் மாவட்ட  நீதிபதி எம்.கே.ரஃபி, குற்றவியல் நீதித்துறை நடுவர்  (1) ஜே.ஜெனிதா மற்றும் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் நம்புநாயகம், செளந்தர பாண்டியன், வழக்குரைஞர் உது மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2,365 வழக்குகள் இனம் காணப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காண திட்ட மிடப்பட்டிருந்தது. இதில், ஏற் கெனவே 26 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு 9 அமர்வுகள் மூலம் தீர்வு காணப்பட்டிருந்தன. அதில் காவல்துறையைச் சேர்ந்த நாகஜோதிக்கு விபத்து காப்பீடு ரூ.2 லட்சம், விபத்தில் உயிழந்தவரின் மனைவி மாரியம்மாளுக்கு ரூ.11 லட்சம் 
காப்பீடு மற்றும் ரத்தினவேல் என்பவர் விபத்தில் இறந்த வழக்கில் அவரது மனைவிக்கு காப்பீடு தொகை ரூ.10 லட்சத்துக்கான  உத் தரவுகளை முதன்மை மாவட்ட நீதி பதி ஆர்.சண்முகசுந்தரம் வழங்கி
னார். தீர்வு காணப்பட்ட வழக்குகள் மூலம் ஒரே நாளில் ரூ.3 கோடியே 12 லட்சத்து 25 ஆயிரத்து 261 ரொக்கம்  சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப் பட்டதாக மக்கள் நீதிமன்ற தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com