தபால்துறை மண்டல போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தபால் துறை சார்பில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான விநாடி வினாப் போட்டிக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக


தபால் துறை சார்பில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான விநாடி வினாப் போட்டிக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராமநாதபுரம் தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர் வே.மாரியப்பன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்திய தபால் துறை தபால்தலை  சேகரிப்பு பழக்கத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில் தீனதயாள் ஸ்பார்ஷ் யோஜனா எனும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.  திட்டத்தில் மண்டல அளவில் விநாடி வினாப் போட்டி வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தபால் தலை குறித்த திட்ட அறிக்கை தயாரித்து வழங்க வேண்டும். 
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புக்குள் படிப்பவர்களாக இருத்தல் வேண்டும். அவர்கள் படிக்கும் பள்ளியானது தபால்தலை சேகரிப்பு  சங்க அமைவிடமாகவும், அதில் மாணவர் உறுப்பினராகவும் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் தபால்தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும். விநாடி வினாப் போட்டியில் நடப்புச் செய்திகள், வரலாறு, அறிவியல், தபால்தலை சேகரிப்பு, புவியியல் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட தலைப்புகளில் 50 வினாக்கள் கேட்கப்படும். போட்டிக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு போஸ்ட் என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அதை முழுமையாக நிரப்பி அஞ்சல்துறைத் தலைவர், தென்மண்டலம், மதுரை-625002, என்ற முகவரிக்கு வரும் 26 ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) அனுப்ப வேண்டும். அனுப்பும் தபால் உறையின் மீது தீனதயாள் ஸ்பார்ஷ் யோஜனா என கட்டாயமாக குறிப்பிடவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com