தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் திட்டமிட்ட மகசூலைப் பெறலாம்

விவசாயத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் திட்டமிட்ட மகசூலைப் பெறலாம் என கோவை வேளாண் பல்கலைக் கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் கே.பிரபாகரன் கூறினார். 


விவசாயத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் திட்டமிட்ட மகசூலைப் பெறலாம் என கோவை வேளாண் பல்கலைக் கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் கே.பிரபாகரன் கூறினார். 
ராமநாதபுரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடக்கி வைத்தார். இதில் தொழில்நுட்ப முறை குறித்து கோவை வேளாண் பல்கலைக் கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் கே.பிரபாகரன் பேசியது: மக்காச்சோள விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு வரை பிரச்னையே இல்லாத நிலை இருந்தது.
 ஆனால் 2018 ஜூலை மாதம் தான் கர்நாடகத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் படைப்புழுத் தாக்கம் கண்டறியப்பட்டது. படைப்புழுக்களை முற்றிலுமாக அழிக்க முடியாது. ஆனால், வேளாண்மைத் தொழில்நுட்பம் மூலம் அதைக் கட்டுப்படுத்தமுடியும். ஆகவே விவசாயிகள் வேளாண்மைத் தொழில் நுட்பத்தை முறையாக செயல்படுத்தினால் திட்டமிட்ட மகசூலைப் பெறமுடியும். தமிழகத்தில் மக்காச்சோள படைப்புழு தாக்குதலை தடுக்க 19 மாவட்டங்களில் சிறப்புக் கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது என்றார். 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் துறை தலைவர் என்.சாத்தையா, பேராசிரியர் என்.முத்துகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர் ஜெ.ராம்குமார் உள்ளிட்டோர் புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கினர்.
ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநரும், ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான எஸ்.எஸ்.சேக்அப்துல்லா திட்ட விளக்கவுரையாற்றினார். விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி தெளிப்பான் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக மாவட்ட இணை இயக்குநர்  (பொறுப்பு) எல்.சொர்ணமாணிக்கம் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கவிதா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com