போக்குவரத்து கழக ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 24th July 2019 07:12 AM | Last Updated : 24th July 2019 07:12 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் நகரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார். செயலர் விஜய பாண்டியன் முன்னிலை வகித்தார். போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பலன்களை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான பயணப்படியை கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதையும் சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும். பணிக்காலத்தில் வழங்கப்பட்ட தண்டனையைக் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்படும் ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக சங்க துணைத் தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். துணைச்செயலர் ராமசந்திரன் நன்றி கூறினார்.