Enable Javscript for better performance
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் "ஸ்மார்ட் கார்டு'- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஓரிரு வாரங்களில் 2019 ஆம் ஆண்டுக்கான அடையாள அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படவுள்ளன. 
     அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு நிகரான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனடிப்படையில் அந்த அடையாள அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) எமிஸ் எண் பொறிக்கப்பட்டு, ஆதாரும் இணைக்கப்பட்டிருக்கும்.
    அடையாள அட்டையில் உள்ள குறியீடு மூலம் கணினியில் மாணவரின் முகவரி, பெற்றோர் விவரம் என அனைத்து அத்தியாவசிய விவரங்களும் பதிவேற்றப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
    ராமநாதபுரம் மாவட்டத்தில் 1064 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 86 ஆயிரம் மாணவ, மாணவியருக்கும், 249 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 69 ஆயிரம் மாணவ, மாணவியருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. 
    தற்போது கல்வி மாவட்ட அலுவலர்கள் மூலம் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
     வரும் ஆகஸ்ட் முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 2019 ஆம் ஆண்டுக்கான அடையாள அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai