Enable Javscript for better performance
அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கை நாளை இரண்டாம் கட்ட கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கை நாளை இரண்டாம் கட்ட கலந்தாய்வு

    By DIN  |   Published on : 25th July 2019 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. 
     ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார், சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களால் ஒப்படைப்பு செய்யப்படும் 50 சதவீத அரசு இட ஒதுக்கீடு இருக்கைகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. அப்போது வருகை தராத விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. 
    பத்தாம் வகுப்பு கல்வி தகுதியில் விண்ணப்பித்த பிரிவுகளுக்கான கலந்தாய்வு, மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் வரும் 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. 
    இதில் 384 பேருக்கு நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என அரசினர் தொழிற்பயிற்சி மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai