Enable Javscript for better performance
அழகு முத்துமாரியம்மன் ஆடிப் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி அருகே உள்ள அரசநகரி கிராமத்தில் உள்ள  கலைச்செல்வி அழகு முத்துமாரியம்மன் கோயில் 26-ஆம் ஆண்டு ஆடிப் பொங்கல் விழா மற்றும் வருஷாபிசேக விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
    இக்கோயிலில் யாகசாலை பூஜையுடன், பொங்கல் விழாவிற்கான காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றம்  நடைபெற்றது. மாலையில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 
    ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பக்தர்கள் விரதமிருந்து கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்றைய தினம் இரவு பூச்சொரிதல் விழாவும் நடைபெறும்.  இதனைத் தொடர்ந்து  27-ஆம் தேதி (சனிக்கிழமை)  அக்கினிச்சட்டி, ஆயிரம் கண் பானை, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வும் நடைபெறும். 
    விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் கு.கண்ணன், நிர்வாகி சுப்பம்மாள் குருந்தலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai