Enable Javscript for better performance
உச்சிப்புளி கடற்படை விமான தளத்தை பொதுமக்கள் இன்று பார்வையிடலாம்- Dinamani

சுடச்சுட

    

    உச்சிப்புளி கடற்படை விமான தளத்தை பொதுமக்கள் இன்று பார்வையிடலாம்

    By DIN  |   Published on : 25th July 2019 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்சிப்புளியில்  உள்ள "ஐஎன்எஸ் பருந்து' இந்திய கடற்படையின் விமான தளம் வியாழக்கிழமை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது.
    கார்கில் போர் வெற்றியை ஆண்டு தோறும் ஜூலை 25 ஆம் தேதி கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளை  இந்திய ராணுவம்  நடத்தி வருகிறது. இதன் தொடர்சியாக உச்சிப்புளியில்  உள்ள "ஐஎன்எஸ் பருந்து' இந்திய கடற்படை விமான தளம்  வியாழக்கிழமை காலையில் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடற்படை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் கடற்படை முகாமிற்குள் வரும் அனைவரும் அரசின் அடையாள அட்டையை  கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    இந்நிலையில், பாம்பன் பேருந்து நிறுத்தம் முன்பு இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்ற பயிற்சி மற்றும் பணிகள் குறித்து ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் அந்நியர்களை எப்படி எல்லைக்குள் நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர் என ஒத்திகை நடத்தி  காண்பித்தனர். இதனை பொதுமக்கள் திரளமான பார்த்து ரசித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai