Enable Javscript for better performance
கமுதியில் விபத்தில் பலியாகும் வன விலங்குகள்- Dinamani

சுடச்சுட

    

    கமுதி பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் காடுகளில் வசிக்கும் மான், நரி, மயில்கள் விபத்துக்களில் பலியாவது அதிகரித்துள்ளதாக வன விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 
    கமுதி பகுதியிலுள்ள குண்டாறு, செங்கப்படை பகுதியிலுள்ள மலட்டாறுகளில் 8 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாததால், காடுகளில் வசிக்கும் வனவிலங்குகளான மான், நரி, மயில்கள் நகர்புறங்களை தேடி, தண்ணீர் , உணவுக்காக வருவது அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் வரும் விலங்குகள் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றன. 
    இதன்படி  4 மாதங்களில் 5  மான்கள் பலியாகியுள்ளன. மயில்கள் நூற்றுக்கணக்கில் உயிரிழந்துள்ளன. 
    இந்நிலையில், மேலராமநதி விலக்கு சாலை அருகே தண்ணீர் தேடி, சாலையை கடந்த நரி வாகனத்தில் சிக்கி பலியானது. 
    பகல் நேரத்தில் நரி பலியானது குறித்து அவ்வழியாகச் சென்றவர்கள் கண்டுகொள்ளாததால், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்படாமல், அதன் மீது பல வாகனங்கள் ஏறி உடல் சிதைந்தது. 
    காடுகளில் வசிக்கும் விலங்குகள், பறவைகளை பாதுகாக்க போதிய அடிப்படை ஆதார அமைப்புகளை ஏற்படுத்தி தரும், வனத்துறையினர், விலங்குகளை பாதுகாக்க, தண்ணீர், உணவு வசதியினை ஏற்படுத்தி தர, நடவடிக்கை எடுக்கவேண்டும் என கமுதி பகுதி வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai