Enable Javscript for better performance
காயக்காரி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் அக்ராஹரம் சாலை ஒளவையார் தெருவில் உள்ள காயக்காரி அம்மன் கோயிலின் 34 ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.  
     கோயிலில் ஆடித் திருவிழா காப்புக் கட்டுடன் திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. இதையடுத்து முக்கிய பூஜைகளாக பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதன்கிழமை காலை, மாலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 
     வரும் 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் மாவிளக்குப் பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து ஏராளமானோர் நேர்த்திக்கடனாக மாவிளக்கில் தீபம் ஏற்றி வழிபடவுள்ளனர். அதையடுத்து சனிக்கிழமை சிறப்புப் பூஜைகளும், வரும் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
     வரும் 31 ஆம் தேதி புதன்கிழமை பக்தர்கள் பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வாண வேடிக்கைகளுடன் அம்மன் பவனியும் நடைபெறுகிறது. விழா நிறைவாக ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai