Enable Javscript for better performance
கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு- Dinamani

சுடச்சுட

    

    கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு 

    By DIN  |   Published on : 25th July 2019 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் அருகே கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை கோனேரியேந்தல் கிராமத்தினர் மனு கொடுத்தனர்.
     ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்  அருகேயுள்ளது கோனேரியேந்தல் கிராமம். இங்கு கோவிந்த கிருஷ்ண பெருமாள் கோயில் உள்ளது. தற்போது கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம பொதுமக்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
     இந்தநிலையில், கோயில் பகுதியில் ஏற்கெனவே மரங்களை நட்டும், கொட்டகை அமைத்தும் தனியார் ஆக்கிரமித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மரங்களால் கோயில் சிலைகளுக்கும், சுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் கிராம பொதுமக்கள் கூறுகின்றனர்.
     இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி, கும்பாபிஷேகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி கோனேரியேந்தல் பகுதி பெண்கள் ஏராளமானோர் ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை பகலில் வந்தனர். 
     அப்போது அவர்கள் கூறியது: கோயில் இடத்தை ஒட்டி தனியார் மரம் வளர்த்தும், கொட்டகை அமைத்தும் ஆக்கிரமித்திருப்பதால் கும்பாபிஷேக யாகசாலை கூட அமைக்கமுடியாத நிலை உள்ளது. ஆகவே ஆக்கிரமிப்பு மரங்களையும், கொட்டகையையும் அகற்றி கோயிலை பாதுகாக்கவேண்டியது அவசியம். ஆனால், கோயில் பகுதியில் விதிமீறி பொது இடத்துக்கு பட்டா பெற தனியார் முயற்சிக்கின்றனர். அதை தடுக்கவேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai