Enable Javscript for better performance
கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் ஆகஸ்ட் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநாடு- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் ஆகஸ்ட் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநாடு

    By DIN  |   Published on : 25th July 2019 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரத்தில்  பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மாநாடு நடத்தப்படும் என சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இ.ஜஸ்டின் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான  கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.கருணாகரன், தாலுகா செயலாளர் ஜி.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள கல்விக் கொள்கையை மாற்ற வேண்டும். 
    ராமேசுவரத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்து  சாலைகளை சீரமைக்க வேண்டும். ராமேசுவரத்தில் இறால் பண்ணையை மூடவேண்டும். 
    மின்தடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் முதல் வாரத்தில் ராமேசுவரத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மாநாடு நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
    இக்கூட்டத்தில் தாலுகா குழு உறுப்பினர்கள் எம்.கருணாமூர்த்தி, ஏ.அசோக், கே.மணிகண்டன், ஏ.ஆரோக்கிய நிர்மலா  உள்ளிட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai