Enable Javscript for better performance
சென்னை-ராமேசுவரம் இடையே விரைவு ரயில் இயக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சென்னை-ராமேசுவரம் இடையே விரைவு ரயில் இயக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை-ராமேசுவரம் இடையே கூடுதல் பகல் நேர விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும் என  பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
    பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழக அலுவலகத்தில் அந்த அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் கோ.அரவிந்தன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத்தலைவர் எஸ்.ஆர்.ராமமூர்த்தி, இணைச்செயலாளர் அப்பாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகம்மது சபீக் வரவேற்றார்.  
    இக்கூட்டத்தில் பரமக்குடி கிளை நூலகம் போதிய இடவசதியுடன் செயல்படும் வகையில் நிரந்தர கட்டடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமக்குடி தலைமை தபால் நிலையத்திற்கு  சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டித்தர வேண்டும்.  சென்னை-ராமேசுவரம் இடையே இரு மார்க்கத்திலும் பகல் நேர விரைவு ரயில் இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai